கடந்த ஏப்ரேல் 22 ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினை தொடர்ந்து மலையகத்தின் எல்ல நுவரெலியா,ஹட்டன்,சிவனொளி பாதமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பினர்.
இதனால் மலையக பகுதியின் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியது.சில சுற்றுலா விடுதிகள் ஹோட்டல்களில் வெளிநாட்டவர்கள் இல்லாததன் காரணமாக பாழடைந்து போயிருந்தன.
இதனால் எல்ல மற்றும் நுவரெலியா பகுதியில் பல சுற்றுலா வீடுதிகள் மூடப்பட்டதுடன் பலர் தொழில் வாய்ப்பினையும் இழந்தனர்.
இந் நிலையில் கடந்த சில தினங்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வரும் வெளி நாட்டு சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நேற்றும் இன்றும் அதிகமான சுற்றலா பிரயாணிகள் பஸ்களிலும் புகையிரத்திலும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் உணவகங்களில் வர்த்தக நடவடிக்கைளும் ச10டு பிடித்துள்ளன.
இது குறித்து இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பிரயாணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஒரு அழகிய நாடு இந்த நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மிகவும் ஆசையாக உள்ளது.
இங்கு இருக்கும் மக்களும் மிகவும் அன்பானவர்கள் ஆகவே நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன.; சந்தர்ப்பம் கிடைக்கும் போது இலங்கையிலேயே சுற்றுலா மேற்கொள்ளப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
