வைத்தியர் ஷாபி சற்று முன்னர் பிணையில் விடுதலை..



டந்த மே 24 ஆம் திகதி குரு­நாகல் பொலி­ஸாரால் வைத்­தியர் ஷாபி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்த குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை பிணையில் விடுதலை செய்ய குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மூன்றாவது தினமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீர பிணைகள் நான்கின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபிக்கு பிணை வழங்குவதில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததை அடுத்து அவருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -