இலங்கையில் சமயம் மற்றும் இனங்களுக்கிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தல் தேசிய மாநாடு கொழும்பு தாமரை அரங்கில் 30ஆம் திகதி பி.பகல் 04.00 மணிக்கு மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே..எம் முசம்மில் தலைமையில் நடைபெறும்
பிரதம அதிதியாக – ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன – கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோறும் கலந்து கொள்கின்றனர் அத்துடன்
விசேட அதிதியாக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்கள் கலந்துகொள்கிறார்.
இம் மாநாட்டின் நோக்கம் பற்றி ஆளுனர் ஏ.ஜே.எம் முசம்மில் இல்லத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் செய்தியாளர்களை அழைத்து இராப்போசனம் வழங்கி இம்மாநாட்டின் நோக்கம் பற்றி விளக்கமளித்தார்.
இலங்கையில் வாழும் பல்வேறு மதங்களை சார்ந்தவர்கள் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் சகவாழ்வோடும் வாழக்கூடிய செய்தியை உலகளாவிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லல்.
இலங்கையில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் சகல விதமான அடிப்படைவாதங்களையும் நிராகரிக்கும் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துக்கூறுதல்.
அமைதி, சமாதானம், மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் மேல்மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். சர்வ மதத்தலைவர்களது பங்களிப்புடன் ஜுலை மாதம் 30ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரை தடாக (நெலும்பொக்குன) அரங்கில் இந்த மாநாடு நடைபெறும்.
நான்கு நிக்காயாக்களினதும் மகாநாயக்கதேரர்கள், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய சமயங்களின் ஆன்மீகத் தலைவர்கள், புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர்கள் பங்கேற்றலுடன் நடைபெறவுள்ள இம் மாநாட்டில் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க் கெளரவ சபாநாயகர் கருஜயசூரிய, கௌரவ எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்சஇ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையின் கசல சமூகங்களும் தாய் நாட்டின் கலாசாரம், சம்பிரதாயம், பாரம்பரியங்களை மதித்து அவற்றினை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கு ஊக்கமளித்தல்.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் அமைதி மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களது வாழ்வை இயல்பு நிலைக்குகொண்டு வருதல்.
பெரும்பான்மை சமூகத்தின் குறிப்பாக பௌத்த மக்களின் மத உணர்வுகளைத் துண்டாமல் அவர்களது மத அனுஷ்டானங்ளையும் பாரம்பரியங்ளையும் மதித்து அண்ணியோன்யமாக நடத்து கொள்ளல்.
இத் தேசிய மாநாட்டில் விசேட அதிதியாக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்கள் கலந்துகொள்கிறார்.
இவர் உலகளாவிய மட்டத்தில் சமய நல்லிணக்கம், சகவாழ்வு போன்றவற்றை மேம்படுத்தும் பொருட்டு பாடுபட்டுவரும் சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் பெரும் அனுபவங்களைக் கொண்ட அறிஞராவார்.
மேலும் உலகலாவீய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பகிரங்கமாக செயற்படும் ஒருவரும் ஆவார். மேலும் இலங்கை சமாதானம், ஒற்றுமை, இன ஐக்கியம், மத நல்லிணக்கம் என்பன நிறைந்த சுபிட்சமும் சௌபாக்கியம் கொண்ட ஒரு நாடாக உருவாக வேண்டுமென்பதே அவரது இவ்விஜயத்தின் பிரதானநோக்காகும்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அவர் மேற்கொண்ட சமய நல்லிணக்க சகவாழ்வுக்கான பணிக்காக விருதுகள் பல பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில் சமாதான சகவாழ்வுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக உலகப் புகழ்பெற்ற கலிலியோ சர்வதேச விருதையும் பெற்றுள்ளார்.
அண்மைக்காலத்தில் பல நாடுகளில் காணப்படும் அடிப்படைவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியாக நின்று செயற்படுபவருமாவார். முக்கியமாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக இவர் மிக முக்கிய பணிகளை சாதிஇ மத பேதமின்றி முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.