ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் வழங்கிய சாட்சியம்..

ப்ரல் 9 ஆம் திகதி கிடைத்த சர்வதேச புலனாய்வு தகவலுக்கு அப்பால் பல தகவல்கள் அரச அதிகாரிகள் மட்டத்தில் பரிமாற்றப்பட்ட போதிலும் கூட புலனாய்வு கடிதத்தை தவிர எமக்கு எந்தவொரு தகவல்களையும் தெரிவிக்கவில்லை என விசேட அதிரடிப்படையின் கட்டளை பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவத்தார்.

அத்துடன் எமக்கு தகவல்களை பரிமாற்றியிருந்து எமது ஒத்துழைப்புகளை கேட்டிருந்தால் நிச்சயமாக தாக்குதலை தடுத்திருக்க முடியும். இந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 20 ஆம் திகதியும் பல தகவல்கள் பரிமாற்றப்பட்டுள்ளது. 20 ஆம் திகதியாவது எனக்கு கூறியிருந்தால் நிச்சயமாக தாக்குதலை தடுத்திருக்கலாம்.

மேலும் இந்திய உயரிஸ்தானிகர் ஆலையம் தாக்கப்படவுள்ளதாக தகவல் 10 ஆம் திகதி கிடைத்தவுடனேயே இந்திய உயர்ஸ்தானிகர் ஆலையத்துக்கான பாதுகாப்பு வழங்கிவிட்டேன். இதற்கான அவர்கள் நன்றிகளையும் தெரிவித்தனர் இது எவருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்க விசேட அதிரடிப்படையின் கட்டளை பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கும்போதே மேற்கண்ட விடயத்தை கூறினார்.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -