எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ஹம்பாந்தோட்டை மாடவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி, மருதநகரில் உள்ள சவரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றை கட்ட நிதி அளித்துள்ள நாமல் அவர்களை அங்கு சந்தித்துள்ளார்.
அவர் சிறையில் இருந்த போது அங்கு சந்தித்து நட்பான தமிழ் சவரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கே இவ்வாறு வீடு கட்ட நாமல் உதவியுள்ளார்.தற்போது அவர்களது வீடு நிர்மாணிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான உதவ கிடைத்தமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -