மத்திய மாகாண சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம் இன்று அட்டனில் திறக்கப்பட்டது.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம் மத்திய மாகாண சனச சங்கத்தின் தலைவர் வை.ஏ.எம்.எச்.பண்டார அவர்களின் தலைமையில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் செயப்பாடுகள் கடந்த காலங்களில் கண்டி பிரதான காரியாலயத்திலேயே நடைபெற்றன.
இதனால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்க கல்வி சார் ஊழியர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கண்டி அல்லது நுவரெலியாவுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் இந்த கல்வி வலயத்தின் ஆசிரியர்கள்,அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த சிரமத்தினை கருத்திற்கொண்டு கடந்த 12.07.2019 கண்டியில் நடைபெற்ற பணிப்பாளர் சபையில் பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம்; முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த உப அலுவலகத்தினை ஆரம்பித்து தருமாறு கோரிக்கை முன்வைத்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை.
எனினும் இது வரை காலமும் ஹட்டன் நகரில் ஒன்று திரட்டும் நிலையமாக செயப்பட்ட அலுவலகம் இனி ஒவ்வொரு திங்கள் தோறும் அங்கத்தவர்களின் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான செயப்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதே வேளை மாதம் இரண்டு முறை அங்கத்தவர்கள் ஹட்டன் உப அலுவலகத்தில் தங்களுடைய கடன் சேமிப்பு,நிரந்தர வைப்பு,கடிதங்கள் பெற்றுக்கொள்ளல் உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென அதன் தலைவர் வை.எம்.எச் பண்டார தெரிவித்தார்.
இந்த அலுவலகத் திறந்து வைத்ததன் மூலம் ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து கண்டி செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
இன்று இந்த அலுவலகத்தில் பலரது காசோலைகள் மற்றும் சேமிப்பு பணம் அ ங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண கல்வி சேலையாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் டி.ஜி.என்.பி.ஜயதிலக,பணிப்பாளர்டி.எம்.மஹிந்த பண்டார,பொது முகாமையாளர் ஏ.எம்.பி.பி.பண்டார ஆகியோரும் கலந்துகொம்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -