அம்பாரை மாவட்ட மக்களே பட்டாசி கொளுத்தும் காலம்- ஒரே கல்லில் பல மாங்காய்கள்.

.
சாய்ந்தமருது மக்களும், கல்முனை மக்களும், குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்களும் பட்டாசி கொளுத்தி ஹக்கீமையும், ஹரீசையும் வரவேற்கும் நிகழ்ச்சி வெகுவிரைவில் நடக்கப்போகின்றது..?

கல்முனை விடயம் தமிழ் தரப்பினரின் சம்மதத்தோடு ஓகேயாகிவிட்டது. அதேநேரம் சாய்ந்தமருது விடயமும் ஓகே யாகி விட்டது. அதனை கெபினட்டின் மூலம் அங்கீகரித்ததன் பின் அதனையொரு வெற்றி நிகழ்ச்சியாக காண்பித்து, அதன் பிறகு எஞ்சியவர்களும் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறப்போகின்றது.

இந்த இலாப நாடகத்தில் தானும் பங்குதாரர்களாக மாறி நாங்களும் தியாகிகளே என்ற பட்டமும் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பைசால் காசிமும், அலிசாஹிர் மௌலானாவும் காய்நகர்த்துகின்றார்கள் என்பதும் உண்மையே...!

இதனால் கிடைக்கும் இலாபம் என்னவோ...

இலாபம்(1) 

ஹரீஸ் அவர்களுக்கு கொள்கைவாதி என்ற பட்டமும், அதேநேரம் சாய்ந்தமருது மக்களிடம் தனது தியாகத்தின் பெறுமதியை எடுத்துச் சொல்லுவதுமாகும். இதன் மூலம் தலைவர் ஹக்கீம் சாணக்கியத்துக்கு தகுதியானவர்தான் என்ற புகழும் கிடைத்துவிடும்.

இலாபம் (2)

இதன் மூலம் ரணிலின் மேலிருந்த குறைகளும் நீக்கப்பட்டுவிடும். அதனால் எதிர்வரும் தேர்தலில் ரணில் கல்முனை மக்களினால் மாலை அணிவித்து வரவேற்கப்படுவார்.

இலாபம் (3)

மேற்கூறிய விடயங்களின் மூலம் ஹக்கீமும், ஹரீசும், பிரதமர் ரணிலும் பயனடைவதானது சுமேந்திரன் குழுவுக்கு நண்மையானதாக அமையும்.

காரணம் ரணில் அரசாங்கம் மீண்டும் ஆட்சிபொறுப்பை எடுக்கவேண்டும் என்பதும், அதற்கு முஸ்லிம்களின் வாக்கு தேவையென்பதும் சுமேந்திரனுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆகவே ரணில் அரசாங்கத்தை கொண்டு வர நடத்தப்படும் நாடகத்துக்கு கல்முனை பிரச்சினை துரும்பாக பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை.

இலாபம்(4)

கல்முனை பிரச்சினையை தீர்த்ததை பெரிய விடயமாக காட்டி மற்ற விடயங்களை கிடப்பிலே போட்டுவிட்டு ரணிலை ஒரு மேம்பட்ட தலைவனாகவும் அதேநேரம் ஹக்கீம், ஹரீஸ் மற்றும் பலரும் இதன் மூலம் தியாகிகளாக இனம் காட்டப்படுவதற்கும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதற்கும் இந்த நாடகம் நல்ல வரப்பிரசாதமாக அமையப்போகின்றது என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம். இப்றாஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -