கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேயே இவ்வாறு தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள்ளே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதுடைய விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விரிவாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -