திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் சங்கத்தின் 16 ஆம் வருட புதிய நிருவாக சபையினரின் தெரிவு மற்றும் அங்கத்துவம் புதுப்பித்தல் தொடர்பான ஒன்று கூடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலை துளசி புரம் மனிதவள நிலையத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் மூவீன ஊடக அங்கத்தவர்களை கொண்ட ஊடகவியலாளர் சங்கமாக தமது ஊடகப் பணிகளுடன் சமூக நலப் பணிகளையும் செய்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இயங்கி வருவது ஏனைய மாவட்டத்திற்கும் ஒரு மாதிரியாகும். இன்று காலை 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் அ.அச்சுதன் தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் பின்வருவோர் 2019/2020 ம்ஆண்டுக்கான புதிய நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்:கியாஸ் ஷாபி (தினகரன், விடிவெள்ளி)
செயலாளர்:எஸ்.சச்சிதானந்தன்(வீரகேசரி)
பொருளாளர்:லக்மால் வதுகே(மௌவிம)
சிரேஷ்ட உப தலைவர்:சசிக்குமார்(தினகரன்)
கனிஷ்ட உப தலைவர்:டபிள்யு தர்மதாச (பி பி சி)
உப செயலாளர்:அப்துல் ஹலீம்(தினகரன்)
கணக்குப் பரிசோதகர்:தகவல் திணைக்கள உத்தியோகத்தர் :திரு அதிரன்
நிர்வாக உறுப்பினர்கள்:ஏ.எஸ்.எம்.தாணீஸ்(தினகரன்) ,றிகாஸ் அஹமட்(தினகரன்) ,ஏ.எஸ்.எம்.அஸ்வர் (நவமணி),அ.அச்சுதன்(வீரகேசரி,தமிழ்மிரர்),வடமலை ராஜ்குமாார்(தமிழ்மிரர்)
இவ் ஒன்று கூடல் கூட்டத்தில் பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.



