இலங்கையில் இவ்வாண்டின் இறுதி சந்திரகிரகணம் (வீடியோ)



பாறுக் ஷிஹான்-
ந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் கடந்த செவ்வாய்க்கிழமை(16) நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.

பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்த நிலையில் நள்ளிரவு- 12.13 மணியளவில் சந்திரகிரகணம் ஆரம்பமாகி அதிகாலை-05.47 மணி வரை சந்திரகிரகணம் இடம்பெற்றது.
மேற்படி சந்திரகிரகணத்தை அவுஸ்திரேலியாஇ ஆபிரிக்கா தென் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில் பலரும் கண்டு களித்துள்ளனர்.
இச் சந்திரகிரகணம் இந்த வருடத்திற்கான இறுதிச் சந்திரகிரகணம் என்பதுடன் 2021 ஆம் ஆண்டு மே மாதம்- 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படுமெனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -