மலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது தொடர்ச்சிய பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போய்வுள்ளன.தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
அட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் பொலிஸ் நிலைய வீதியில் இன்று பகல் மண்திட்டு சரிந்து வீழ்ந்தததில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு கணத்த மழை பெய்து வருவதனால் லக்ஸபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 06 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அதிகமான தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்கு சமூகம் தரவில்லை. என்றும் இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
காலை முதல் இடை விடாது மழை பெய்து வருவதனாவ் கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புற்களை அறுக்க முடியாது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மழை காரணமாக மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளும் சோகையிழந்து காணப்படுகின்றன.