அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஹரீஸ் அவர்கள் உள்ளூராட்சி மாகாண சபை இராஜாங்க அமைச்சர் பதவியை சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றவே இந்த பதவியை எடுக்கிறேன் என என்னிடம் நேரடியாக தெரிவித்தீர்கள். அந்த வாக்குறுதியை இதுவரைக்கும் நிறைவேற்ற முடியவில்லை.
இருந்தபோதும் மீண்டும் அப்பதவி உங்களுக்கு கிடைக்கவுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றிக்கடன் செய்ய வேண்டும். இன்னமும் மக்களை ஏமாற்ற முடியாது.
அதேபோன்று கல்முனை தமிழ் பிரதேச செயலக கோரிக்கைக்கும் தீர்வு காண வேண்டும். கல்முனை விடயத்தில் புத்திஜீவிகள் உலமாக்கள் மாற்று மத தலைவர்கள் தமிழ் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலருடனும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வர வேண்டும்.
உங்கள் அமைச்சர் பதவி காலத்தில் நிறைவுக்கு வராமல் எஞ்சியுள்ள அபிவிருத்திகளை செய்யவேண்டியுள்ளது. கல்முனை மாநகர சபைக்கு நிரந்தர கட்டிடம் இல்லை, பொது சந்தை கட்டிடம், நவீன வசதிகளுடன் கூடிய கல்முனை பொது நூலகம் இல்லை, கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் அரைகுறையாய் கிடக்கிறது, சாய்ந்தமருது பீச் பார்க் பெருந்தலைவரின் பெயரை தாங்கிக்கொண்டு இதுவரைக்கும் மக்கள் பாவனைக்கு வழங்காமல் அலங்கோலமாய் கிடக்கிறது, சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய மைதானம் அரைகுறை, சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டம் பாதியில் கிடக்கிறது, சாய்ந்தமருது பௌஸி மைதானம் அரைகுறை இப்படி நிறைய திட்டங்கள் இன்னும் நிறைவுக்கு வராமல் உள்ளது.
தலைவரின் நகர திட்டமிடல் அமைச்சின் கீழ் ஏராளமான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன இவற்றை உரிய முறையில் செயல்படுத்துவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எமக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை, கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது நான் வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் மாநகர மேயர் பதவியை பெற்றுத்தருவேன் என உறுதிமொழி வாங்கினீர்கள், ஆனால் அதுவும் நடக்கவில்லை, தந்திருந்தால் இவை அனைத்து வேலைகளையும் மிக சிறப்பாக செய்து முடித்திருப்பேன். தமிழ் மக்களின் தனியான செயலக கோரிக்கை வந்தே இருக்காது அந்த அளவுக்கு எனது சேவை விஸ்தரிக்கப்பட்டிருக்கும்.
எனவே தற்போது கிடைத்திருக்கும் இக்குறுகிய கால சந்தர்ப்பத்தை பயன்படுத்த முன்வாருங்கள். குறுகிய காலத்தினுள் இவற்றை ஒரு சவாலாக ஏற்று மேற்குறித்த வேலைத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு பதவியை பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் நான் மிகவும் பக்குவமாக கல்முனை தொகுதி மக்கள் சார்பாக வேண்டுகிறேன்.