மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்ற ஹக்கீம், ரிஷாத் அணிகள்.

ண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக இன்று மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அத்துடன் ரிஷாட் பதியுதீன் வகித்த அமைச்சின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த புத்திக பத்திரண அவ்வமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னர் அவர் குறித்த அமைச்சின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரஊப் ஹகீம்: நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்

ரிஷாட் பதியுதீன்: கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்

அமீர் அலி: விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

அப்துல்லாஹ் மஹ்ரூப்: துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்.

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களாயிருந்த எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷல் காஷிம், அலிஷாஹீர் மெளலானா ஆகியோர் இதுவரை பதவிகளேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -