ஸ்ரீ.மு.காங்கிரஸ் ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணத்தைக்காணவில்லை-பொலிஸில் புகார்


எம்.எப்.எம்.பஸீர்-

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கருவாத்தோட்டாம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருவாத்தோட்டாம் பொலிஸ் பிரிவில் உள்ள தமது வீட்டில் இருந்த 60 இலட்சம் ரூபா பணமே இவ்வாரு காணாமல் போயுள்ளதாக நேற்று இரவு ரவூப் ஹக்கீமின் மனைவி சனாஸ் ஹகீம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந் நிலையில் கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ரவூப் ஹக்கீமின் வீட்டின் பணியாளர்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் , காணாமல் போனதாக கூறப்படும் பணத் தொகையை கண்டுபிடிக்க விஷேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் ரவூப் ஹக்கீமின் கருவாத்தோட்டம் வீட்டுக்கு இன்று சென்ற விஷேட பொலிஸ் குழு அங்கிருந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்போது அவ்வீட்டில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்து கிழித்து எரியப்பட்டிருந்த 5000 ரூபா நோட்டுக்கள் பல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவ்வாரு கிழித்து குப்பையில் எரியப்பட்டிருந்த 36 நோட்டுக்கள் வரை மீட்கப்பட்டதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -