பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பொகவந்தலாவை நகர பாதையை கார்ப்ட் இடும் பணிகளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்த அபிவருத்தி திட்டதுக்கு 18 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இந்த திட்டம் நகர வடிகாலமைப்புடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட உள்ளது.
அத்துடன், அமைச்சர் திகாம்பரத்தின் வழிகாட்டலில் கடந்த வாரம் வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்தினை தொடர்ந்து விரைவில் நோர்வூட் சந்தி வரையான பாதையும் அமைச்சர் திகாம்ரபத்தினால் கார்ப்ட் இடும் பணிகள் ஆரம்பக்கப்பட உள்ளன என்றார்.