மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய “ஆன்மாவின் ஒரு துளிவெட்கம் ” கவிதை நூல் பற்றிய பேச்சாடலும் நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு(07-07-2019) மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் அலறி தலைமையில் நடைபெறவுள்ளது.
முன்னிலை அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,கல்முனை மாநகர ஆணையாளர் எம்சி.அன்சார்,சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.முகம்மது நுபைல்,ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் எம்.பி.ஏ.ஹஸன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இலக்கிய அதிதிதகளாக எழுத்தாளர் உமாவரதராஜன்,கவிஞர் சோலைக்கிளி, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,ஆய்வாளர் மன்சூர் ஏ. காதர்,கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்தவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன் பெறவுள்ளார்.
வரவேற்புரை தலைமைப்பீடசமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,நூல் அறிமுகம் கவிஞர் டீன்கபூர்,நூல் பற்றிய உரைகள் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்,அம்ரீதா ஏயெம்,நப்லா,முகம்மட் சப்ரி,திலிப் குமார் ஆபித் ஆகியோர்.அரங்கமைப்பு கவிஞர் ஜமீல்,நிகழ்ச்சித் தொகுப்பு கவிஞர் விஜிலி.