ஆனால் நமது உடல்நிலை பற்றி நாம் அலட்டிக்கொள்ளாமல் குழந்தைகளை முத்தமிடுவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதம் பற்றி சொல்லிக்கொள்ள ஒரு விடயத்தை மாத்திரம் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாகவே எல்லோருடைய உடம்பிலும் ஒரு வகை கிருமி இருக்கும்.
அதனால தான் பிறந்த குழந்தையை அவசரமா முத்தம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க .ஆனா நம்ம உடம்புல உள்ள கிருமிகள் குழந்தைகளை முத்தம் கொடுப்பபதனூடாக குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தக்கூடும்.அந்த மாதிரி தான் பிறந்த குழந்தையொன்றுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்று இருக்கு. ஒரு தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து
இரண்டாவது நாளிலேயே அவங்க குழந்தைய வைத்தியசாலையின் அனுமதியுடன், தூக்கிட்டு வீட்டுக்கு கொண்டு போயிட்டாங்க .
ஆரம்பத்தில் இந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் எடையோடும் தான் இருந்தது.ஆனால் ஏழு நாட்களுக்கு பிறகு இந்த குழந்தையோட உடல் எடை குறைய ஆரம்பித்ததும், பயந்து போன இந்த குழந்தையோட அப்பா அம்மா உடனே குழந்தையை வைத்தியசாலையில் சேர்த்துட்டாங்க.மருத்துவர்களும் இந்த குழந்தையை பரிசோதித்து பல்வேறு சிகிச்சைமுறைகளை மேற்கொண்டும் தொடர்ந்து நான்கு நாட்களாகியும் டாக்டர்களால் இந்த குழந்தைக்கு என்ன ஆச்சு , உடல்நிலை இந்த மாதிரி ஏன் ? ஆகுது என்ற காரணத்தை கண்டுபிடிக்கவே முடியல .இதனால குழந்தையோட அப்பா அம்மா மிகவும் பயந்துட்டாங்க .
குழந்தையோட அப்பா மட்டுமல்ல இந்த வைத்தியசாலையில் இருந்த எல்லாருமே இந்த குழந்தையை பார்த்து ரொம்ப பயந்துட்டாங்க .நான்கு நாட்களுக்கு பின்னர் ,
குழந்தை உலகை விட்டு பிரிந்து விடக்கூடும் என்ற தகவலை கேட்டதும் அப்பா அம்மாவோட அழுகையை கட்டுப்படுத்தவே முடியல .மிகவும் மன வருத்தத்தோட இருந்தாங்க.
அதைத் தொடர்ந்து இந்த குழந்தைக்கு மூச்சு விடுவது குறைவடைந்து கோமா ஸ்டேஜுக்கு இந்த குழந்தையை போயிடுச்சு.அதன் பின்னர் டாக்டர்கள் பெற்றோரிடம் , இந்த குழந்தையை இதுக்கு மேல காப்பாற்ற முடியல என விடயத்தை தெரிவித்தனர்.இதைக் கேட்டதும் குழந்தையை பெற்ற அப்பா அம்மாக்கு என்ன பண்றதுனே தெரியல .
குழந்தை பிறந்து 15 நாள் ஆகிய நிலையில் குழந்தையோட உயிர் இப்படி பரிதாபமாக போயிடுச்சே!!என்ன காரணம் என்றுகூட கண்டுபிடிக்க முடியலையே!!! என்று சொல்லி ரொம்பவும் வருத்தத்துல அழுதுட்டே இருந்தாங்க.அதன் பின்னர் குழந்தையின் சடலம் பிரேத அறைக்கு கொண்டுவரப்பட்டு,
பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோதுதான்,குழந்தை இறந்ததற்கான காரணத்தை கண்டறியக்கூடியதாக இருந்தது.காரணத்தை அறிந்ததும் எல்லோருக்கும் அதிர்ச்சிதான்.
குழந்தை இறந்ததற்கான காரணம் குழந்தையின் உடலில் #ஹேப்பினஸ் என்ற ஒரு வைரஸ் பரவியிருந்ததேயாகும்.பொதுவாகவே இந்த வைரஸ் இருமல் சளி தொந்தரவு உள்ளவர்களுடைய வாயிலதான் இருக்கும் .
அந்த மாதிரி ஏதாவது நோய் உள்ளவர்கள் தெரியாத்தனமாக எதுவுமே அறியாத இக் குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்து இருக்காங்க .அதனால தான் இந்த குழந்தைக்கு
அவங்க வாயில் உள்ள இந்த வைரஸ் குழந்தையோட உடம்புல பரவக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கு. பொதுவாகவே குழந்தைகளை ஒரு வயது வரைக்கும் மிகவும் பாதுகாப்பாகவே வைத்திருக்கணும்.ஏனெனில் நம் குழந்தையோட உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவும் குறைவாகவே இருக்கும் .
அதனால தான் ஒரு வயது வரைக்கும் குழந்தையை ரொம்பவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென டாக்டர்கள் சொல்றாங்க .
#பார்த்தீர்களா!!
#முத்தத்தால் #முடிவடைந்த #குழந்தையின் #வாழ்க்கையை.
அன்பின் உறவுகளே,
எந்தக் குழந்தைகளோடு அன்பாக பழகுவதாகயிருந்தாலும், நாங்கள் சுத்தமாகயிருப்பது அவசியம் என்பதை இக் குழந்தையின் மரணம் நமக்கு சொல்லிச்சென்றுள்ளது.
( சம்பவம் இங்கிலாந்தில்)
#ஏறாவூர் #MSM #நஸீர்