நல்லாட்சி அரசினால் வழங்கப்படும் சமுர்த்தி திட்டத்துக்காக யாரும் பெற்றுத் தந்ததாக கருதி எதையும் கொடுக்க தேவையில்லை இதனை பிரதேச செயலாளர் என்ற வகையில் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தெரிவித்தார்.
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து படிவங்களை இன்று (18) கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கும் வைபவத்தின் போதே இவ்வாறு தெரிவித்த
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இந்த சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக தங்களது பிள்ளைகளின் கல்வி வறுமை ஒழிப்பில் இருந்து வெளியேற வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழியாக அமைகின்றது இதன் ஊடாக வறுமை நிலையில் இருந்து மீண்டு பிள்ளைகளுடைய கல்வியின் வளர்ச்சியிலும் உதவக் கூடிய வழி வகைகளை அரசாங்கம் செய்து தந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால திட்டமும் இதுவே இத் திட்டத்தின் ஊடாக நாட்டில் வறுமையற்ற நிலை காணப்பட வேண்டும் இதனை நோக்கிய பயணத்தை அரசாங்கம் எதிர்காலத்திலும் நடை முறைப்படுத்தவுள்ளது இதுவே அரசின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -