காசல்ரி நீர்த்தேக்கம் அமைக்கப் பட்டதன் காரணமாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட சமுத்திர வள்ளி நகரான காசல்ரி (கடைவீதியை) நகரை அபிவிருத்தி செய்ய நோர்வூட் பிரதேசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்
நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த சபையமர்வு 18/07 டின்சின் கலாசார மண்டபத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு தலைமையில் இடம்பெற்றது. இதன்போது காசல்ரி கடை வீதியில் தற்காலிக கடைத்தொகுதியை அமைப்பது தொடர்பில் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பொகவந்தலாவை, டின்சின், நோர்வூட் மற்றும் புளியாவத்தை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அக்கறையுடன் செயற்படும் திட்டங்களை நோர்வூட் பிரதே சபை, காசல்ரி நீர்தேக்கத்தில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட சமுத்திரவள்ளி நகரான தற்போதைய காசல்ரி கடை வீதியையும் அபிவிருத்தி செய்து அந்த நகர் பாதுகாக்கப்பட வேண்டும் அதே போல லெதண்டி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட 06 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கடைத்தொருவானது சிறிய ஆங்காங்கே வர்த்தக நிலையங்களையும் உல்லாச விடுதிகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தளமாக காசல்ரி பிரதேசம் காணப்படுகின்றது.
உல்லாசபயணிகள் இந் நிலையில் குறித்த பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைக்கான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 14 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட அட்டன் நகரையே நாட வேண்டியுள்ளது. ஆகவே பிரதேசவாழ் மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு காசல்ரி கடைவீடியில் தற்காலிக கடைத்தொகுதியொன்றை அமைக்க சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தொரிவித்தார்
மேற்படி பிரேரணையை பிரதேசபை உறுப்பினர்களான காமராஜ், அருள்நாயகி ஆகியோர் ஆதரித்து உரையாற்றியதுடன் சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகமான ஆதரவோடு காசல்ரி கடை வீதியில் தற்காலிக கடைத்தொகுதியை அமைக்க ஏகமானதாக தீர்மானிக்கப்படட்டது
சமபந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சபைத்தலைவர் இதன் போது உத்தரவிட்டார்
