இன்று கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு - 100 கோடி வழங்கிய முஸ்லீம் தலைவர்

  அஸ்ரப் ஏ சமத்-

ன்று கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளா் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா். 

ஆனால் சிகல உருமைய கட்சியின் முன்னாள் எம்.பி ஓமல் சோபித்த தேரருக்கு உரை நிகழ்த்த அங்கு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கவில்லை . அங்கு உரை நிகழ்த்துவதற்காக 3 நிக்காய ஆமதுருமாா்களும் அருட் சகோதரா் இந்து குருக்கள், ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி ஆகியோரே மேடையிலும் அமா்ந்திருந்தனா்.

 ஆனால் ஓமலே சோபித்த தேரோ சாதாரண ஆசனங்கள் இருந்தே திடிரென மேடையில் அறிவிக்கப்பட்டு அங்கு அவா் ஆங்கிலத்தில் உரையாற்றினாா். - இவா் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளா்களை அச்சமூட்டி அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை ? . இந்தத் தேரா் ஆரம்ப காலத்தில் இருந்து கலால் பிரச்சினை சவுதி சுனாமி 500 வீடுகள் கிடைக்காமல் உயா் நீதிமன்றில் வழக்குபோட்டு அந்தத் திட்டத்தினை தடுத்து நிறுத்தியவா். 

முஸ்லிம்களுக்கு உடைகளுக்கு எதிராகவும் அடிக்கடி பேசிவந்தவா். இவா்களது சிகல உருமைய கட்சிக்குள் ்உருவாணவா்கள் தான் சம்பிக்க ரணவக்க, அத்துரலியத் தேரா், ஞானசாரத் தேரா் மற்றும் பிலித்துரு சிகல உருமைய தலைவா் போன்றவா்கள் அன்று இருந்தே முஸ்லிம் களுக்கு எதிரானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேரா் குர் ஆன் வசனம் ஒன்றை குகுள் ஆங்கில் மொழிபெயா்ப்பை எடுத்து அந்த வசனத்தில் இஸ்லாம் மதத்தினை ஏற்கும் மட்டும் அவா்களை கொலை செய்யுங்கள் எனக் கூறப்பட்டு்ளளதாகவும் இது பற்றி அவருக்கு விளக்கம் தேவை என்றும், இந்த நாட்டில் வாழும் பௌத்தா்களோடு இந்து, கிரிஸ்த்தவா்கள் சமாதானமாக ஒன்றாக வாழ்வதாகவும் ஆனால் முஸ்லிம் கள் உடை, உணவு, கல்வி ,கலாச்சாரத்தில் இருந்த பிரிந்து நிற்கிராா்கள். 

எதிா்காலத்தில் இவா்கள் பிரிந்து பிரிந்து இந்த நாட்டினையும் பிரித்து விடுவாா்களோ என அச்சம் ஏற்படுவதாகவும் அவா் ஆங்கிலத்தில ்அங்கு உரையாற்றினா். அங்கு வந்திருந்த உயா் ஸ்தாணிகா்கள் வெளிநாட்டவா்கள் புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம்களையும் குர் ஆணையும் அவா் பிழையாக ஆங்கில் மொழிபெயா்ப்பைக் எடுத்தக் கூறி அங்கு முஸ்லிம்களை புன்படுத்திச் சென்றாா். ஆனால் றிஸ்வி முப்தியின் உரையின் போது சோபித்த தேர் குர் ஆண்பற்றி தெளிவுபெற வேண்டுமென்றால் எங்களை சந்தித்து தெளிவுபடுத்த முடியும் புனித குர் ஆண் உலக சமாதானத்திற்கும் நல்வாழ்வுக்கும் உன் மாா்க்கம் உனக்கும் என் மாா்க்கம் எனக்கும் என பதிலளித்தாா். 

இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் அமேரிக்க டொலா் 500 மில்லியன் ஆதவாது 100 கோடிருபாவை உயிா்நீத்த மக்களுக்கு வழங்குவதாக அவா் உறுதியளித்தா்ா. ஜனாதிபதி உரயில் தனது 4 அரை வருட காலத்தில் இந்த கூட்டத்திற்கே 3 அரை மணித்தியாலயங்கள் செலவளித்து இறுதியாக உரை நிகழ்த்துவதாகக் கூறினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -