வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை


எப்.முபாரக்-
டமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் இது தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் தற்போது பெறப்பட்டு வருவதுடன் மிகவிரைவில் இவ்வங்கியினை உத்தியோகபூர்வமாக வடமாகாணத்தில் நிறுவுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியினூடாக வட மாகாணத்தில் வாழும் சுமார் 1.3 மில்லியன் மக்களும் பயனடைய வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -