சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டம்



க.கிஷாந்தன்-
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் 13.05.2019 அன்று (வியாழக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் பதுளை பொதுவைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவஅதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -