அஸ்லம் எஸ்.மௌலானா-
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மோன்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதான்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வதர உதவிகளை வழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மேற்கொண்டு வருகின்றார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (13) சவளக்கடை பல்தேவை கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தவர்களின் சுயதொழில் வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்களும் அவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது எதிர்காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் ஊடாக இப்பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்.