கல்முனை விவகாரம்! ஹரீஸ் களத்தில்...!

றியாத் ஏ. மஜீத்-
ல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தல் சம்பந்தமாக தழிழ்த் தலைமைகளான முன்னாள் வட மாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில்அமைப்புகள் ஒன்றிணைந்து பாரிய பேரணியினை நாடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கல்முனை உப பிரதேச செயலகத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களின் ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்நிர்வாகத்தினருக்கும், முஹல்லா பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினருக்கும் ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கும்விளக்கமளிக்கு முகமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்தமூன்று நாட்களாக களத்தில் நின்று தொடர் கூட்டங்களை கூட்டி விளக்கமளித்து வருகின்றார்.

இதனடிப்படையில் பொத்துவில் தொகுதி ஊர்களான பொத்துவில், அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு,அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், ஆலிம் நகர், நிந்தவூர், மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களும்சம்மாந்துறை தொகுதி ஊர்களான சம்மாந்துறை இறக்காமம், மஜீத் புரம், வரிப்பேத்தன் சேனை, வாங்காமம்,மத்திய முகாம், நாவிதன்வெளி பிரதேச முஸ்லிம் ஊர்களும் கல்முனை தொகுதி ஊர்களான கல்முனை,சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை, இஸ்லாமாபாத் ஆகிய ஊர்களின் ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்நம்பிக்கையாளர்கள், முஹல்லா பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குகல்முனை உப பிரதேச செயலக விவகாரம் குறித்து விரிவாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் விபரித்துக்கூறினார்.

முஸ்லிம்களின் அடையாளம், முஸ்லிம்களின் முக வெற்றிலை கல்முனை நகரினை கைப்பற்றுவதற்காக தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிவில்அமைப்புகள் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையினை சீர்குலைக்க பல்வேறு சதித்திட்டங்களைமேற்கொண்டு வருகின்றனர். இச்சதிகளை முஸ்லிம் சமூகம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் தருணமல்ல.இதற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்ஹரீஸ் இதன்போது விரிவாகக் கூறினார்.

தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மண்ணில் விரிவினையினை கொண்டுவரும் பொருட்டு யாழ்ப்பாண தலைமைகள், மட்டக்களப்பு மற்றும் திருமலை தமிழ்த் தலைமைகள் கல்முனை உபபிரதேச செயலக விவகாரத்தை கையிலெடுத்து இவ்விடயத்தினை அடைந்து கொள்ளவதற்காக மட்டுலிருந்துபேரணி வருவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு முஸ்லிம் சமூகம் ஓடி ஒழியாமல்தனது ஒன்றிணைந்த பலத்தினை காட்ட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேலும் தெளிவுபடுத்திகூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -