தெலுங்கானா மக்கள்தான் என் குழந்தைகள் அதனால்தான் நான் குழந்தை பெற வில்லை-விஜய சாந்தி அதிரடிப் பேட்டி

 வைஜெயந்தி ஐபிஎஸ், மன்னன் உள்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் விஜய சாந்தி. அரசியலுக்கு வந்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவராக இருக்கும் அவர் தனியார் இணையதளத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-


கேள்வி:- சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன?

பதில்:- பணப்பட்டு வாடா, பிரதமர் மோடி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உடந்தையால்தான் சந்திரசேகர ராவ் போலியாக வெற்றி பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறோம். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் எங்கள் கட்சியிலும் சில தவறுகள் இருக்கின்றன. மக்களுக்குப் பிடிக்காத சந்திரபாபு நாயுடுவுடன் எங்கள் கட்சி, கூட்டணி அமைத்ததில் எனக்கு விருப்பமில்லை.
எனவே, அக்கட்சியின் வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. என் முடிவை மக்கள் வரவேற்கிறார்கள். எங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகக் கடுமையாகப் பிரசாரம் செய்தேன். என் கட்சியின் வெற்றிதான் எனக்கு முக்கியம். நான் நினைத்ததுபோலவே ‘காங்கிரஸ் கட்சி, தெலுங்கானாவுக்கு எதிரான சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்துள்ளது.

அந்த கூட்டணியை வெற்றிபெறச் செய்தால், வேலைவாய்ப்புகள், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நீரை ஆந்திரா மாநிலத்துக்கு சந்திரபாபுநாயுடு கொண்டு சென்றுவிடுவார். தெலுங்கானா மாநிலம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிடும்’ என்று சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்தார். இதை அப்பாவி மக்கள் பலரும் நம்பினர்.

எனவே தெலுங்குதேசம் கட்சியுடனான கூட்டணியே, எங்கள் தோல்விக்கு முதல் காரணம். வேட்பாளர்கள் தேர்வில்இழுபறி; உட்கட்சிக்குள்ளேயே நிகழ்ந்த சூழ்ச்சிகள் ஆகியவையெல்லாம் எங்கள் பலவீனங்கள். காங்கிரஸ் கட்சி தனித்து நின்று, ஒற்றுமையுடன் பணிசெய்திருந்தால், நேர்மையாகத் தேர்தல் நடைபெற்று இருந்தால் நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடித்திருப்போம்.’


கே:- தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதற்கு இதுதான் காரணமா?

ப:- ‘இப்போது கட்சியின் வெற்றியே முக்கியம். நான் போட்டியிட்டால் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்ய நேரம் இருக்காது’ என்று ராகுல் காந்தியிடம் சொல்லிவிட்டுத்தான் நான் போட்டியிடவில்லை. வரும் தேர்தல்களில் நிச்சயம் போட்டியிடுவேன்.

கே:- தெலுங்கு தேசம் கட்சியுடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறதா?

ப:- தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி நடந்து முடிந்த தெலுங்கானா தேர்தலுடன் முடிந்துவிட்டது. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படியான சூழல்கள் உருவானால், கடுமையாக எதிர்ப்பேன்.

கே:- வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப்பிரசாரம் செய்ய தமிழகம் வருவீர்களா?

ப:- அந்த நேரத்தில் இங்குள்ள இரண்டு மாநிலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன. பணிகள் அதிகம் இருக்கும் என்பதால், தமிழகத்தில் நான் பிரசாரம் செய்ய வரவாய்ப்பில்லை.

ப:- என் வாழ்வின் அர்த்தம் தனி தெலுங்கானா உதயம். அது நிறைவேறிவிட்டது. அடுத்து, தெலுங்கானா மாநிலத்தின்வளர்ச்சி. அதை சந்திரசேகர ராவ் செய்யப்போவதில்லை. ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் அமைச்சர்களைக்கூட முழுமையாக நியமிக்காமல், மக்கள் பணியைச் சரியாக செய்யாமல் இருக்கிறார்.

அவர் முதல்வர் பதவியை பவராக நினைக்கிறார். எனக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தால், சேவையாக நினைத்து மக்களுக்குப் பணியாற்றுவேன். தெலுங்கானாவை முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். தெலுங்கானா மக்கள்தான் என் குழந்தைகள். அவர்களுக்குப் பணி செய்யவே, நான் குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி மாலைமலர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -