இறக்காமத்தில் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா!!!


அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் பிரதேச கிளை அங்குராப்பண நிகழ்வும் , அமைப்பின் எதிர் கால சமூகசேவைகள் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் அண்மையில் இறக்காம பிரதேச அமைப்பாளர் எம்.கே.எம்.நெளசாட்தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் பிரதம அதிதியதாக கலந்து கொண்டு கலந்து அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றி நிகழ்வில் கலந்து கொண்ட இறக்காமம் பிரதேச இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

அமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவரான முகம்மட் தில்சாத்,அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முகம்மட் றியாத் ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமைப்பின் இறக்காம பிரதேச செயற்குழு தெரிவும் இடம்பெற்றது.

அதில் இறக்காமம் பிரதேச அமைப்பாளராக. எம்.கே.எம்.நெளசாட் மற்றும் அமைப்பின் பிரதேசத்துக்கான செயலாளராகஎம்.ஏ.ஹாதி, பிரதி அமைப்பாளராக.எம்.எம்.ஹஸீப், பிரதி செயலாளராக.எம்.சி.எம்.சாஜித்,

ஊடக இணைப்பாளராக.எம்.முக்சித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -