உலகில் தலை சிறந்த கல்வி முறையை பராமரிக்கும் நாடு


யு .எச் ஹைதர் அலி-
லகின் சிறந்த கல்வி முறையை கொண்ட நாடு பின்லாந்து ஆகும். பின்லாந்தில் ஏழு வயது பூர்த்தி அடைந்ததின் பின்பு பாடசாலைகளுக்கு பிள்ளைகள் அனுமதிக்கப்படுவார்கள். எமதுநாடுகளைப்போல் 1/12 வயதில் Play Group, 2 1/2 வயதில் (Free K.G ) 3வயதில் (L.K.G), 4வயது தொடக்கம் (U.K.G ) என்றெல்லாம் பிள்ளைகளின் பாலர் பராயத்தை துஷ்பிரயோகிக்கும் எந்தவகையான வதைகளும் பின்லாந்தில் இல்லை , தாயின் கருவறையில் இருந்து வெளிவந்ததும் ஓடிச்சென்று வகுப்பறையில் அமர்ந்து கொள்ளும் நிலை அங்குள்ள சிறார்களுக்கு இல்லை .
தூங்கம் நேரத்தை தவிர்ந்த ஏனைய நேரங்களில் குழந்தை எதோ ஒன்றை கற்றுக்கொள்கிறது. வேகமாக இயங்கும் குழந்தைகளின் இளம் மூளை ஒவ்வொரு சூழலிலிருந்தும் வரும் ஒவ்வொரு அசைவுகளில் இருந்தும் சப்த்தங்களில் இருந்து கற்றுக்கொள்கிறது. ஒரு மரத்தில் இருந்து இலை விழுவதில் இருந்து , சிறிய ஒரு வித்தில் மரம் வளர்வது , இசை கருவிகளில் இருந்து வரும் சத்தம் தொடக்கம் பறவைகள் கீச்சிட்டு பறப்பது வரைக்கும் குழந்தைகள் எதோ ஒன்றை கற்றுக்கொள்கிறது . இவ்வாறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை அவர்களுக்கு கொடுக்காமல் சிறுபராயத்தை பறித்தெடுத்து வகுப்பறை சுவறுகளுக்குள் சிறைப்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க முடியும் என்று என்னுவது மிகப்பெரிய ஒரு தவறான சிந்தனையாகும்.

தனது ஏழு வயதில் பாடசாலையில் சேரும் பின்லாந்தின் குழந்தைகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது அவர்களுடைய 10வயது வரை வருடத்துக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே பாடசாலைகளுக்கு செல்வார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர்களது ஒரு விடுமுறை நாட்கள். ஒவ்வொரு நாளும், பள்ளி ஒரு சில மணி நேரங்கள் மற்றுமே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, கல்விக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அதே அளவான நேரம் இசை, கலை மற்றும் விளையாட்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருகிறது. ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு ஓய்வு அறை உள்ளது. அந்த நேரத்தில் கட்க விரும்பாத குழந்தைகள், மற்றும் சோர்வாக இருக்கும் குழந்தைகள் அவர்களுக்கு ஓய்வு அறைக்குச் சென்று ஓய்வெடுக்க முடியும்.
நமது நாடுகளை போல் குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கைகள் (Report Card) பெற்றோர்களுகு அவர்களின்கையொப்பங்களுக்காக வழங்கப்படடுவதில்லை. குழந்தையின் கல்வி நிலையை அறிய விரும்பும்பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம். கல்வியில் போட்டித்தன்மை இன்மையால்பரீட்சையில் கூடுதல் புள்ளிகளை பெறவேண்டும் என்கின்ற மனநிலைக்கு மண அழுத்தத்துக்கு மாணவர்கள்உட்படுவதில்லை.
மாணவர்கள் தங்கள் போட்டியாளர்களாக மற்ற மாணவர்களைக் காண விருப்புவதில்லை. மாணவர்களுக்கு "வீட்டுப்பாடம்" கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் ஒரு கருத்தை தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தில் வீட்டுப்பாடத்தை தேர்வு செய்யமுடியும் ஆனால் அது கட்டாயமில்லை. ஒவ்வொரு பாடசாலைகளினதும் மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 600 ஆகும். (எமது நாடுகளைப்போல் 3000 -4000 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இல்லை.) பின்லாந்தில் தனியார் பள்ளிகள் இல்லை. பாடசாலைகள் கல்வி முற்றிலும் மாகாணங்களுக்கு சொந்தமானது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை வழங்குவது அரசின் கடைமை எனவே, பின்லாந்தில் 99% மாணவர்கள் உயர்ந்த தரத்திலான கல்வியை பெறுகின்றார்கள். இந்த மாணவர்களில் 94%வர்கள் உயர் கல்வியே நோக்கி செல்கிறார்கள். ன்ணன்ணன் (மேலதிக வகுப்புகள்) எனும் கீழ்த்தரமான கலாசாரத்தை அந்த நாட்டிற்குல் அறிமுகப்படுத்தப்படவில்லை.

பரீட்சை எழுதவேண்டும் சித்தியடையவேண்டும் என்கின்ற மனப்பான்மையே இல்லாத சூழலில் வளர்கின்ற இந்தமாணவர்கள், சர்வதேச ரிதியான போட்டிகளில், தேர்வுகளில் அதிகூடிய மதிப்பெண்களை பெறக்கூடியவர்களாகவும் உயர்தரத்திலான முடிவுகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது. சர்வதேச அளவிலான கல்வியாளர்கள் இந்த கல்வி முறையின் சாதனைகள் பற்றி ஆச்சரியப்படுகிறார்கள். இந்தபுரட்சியின் காரணத்தை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஐக்கிய நாடுகளின் சபையின்அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் இந்த விஷயத்தில் பல ஆய்வுகளை மேட்கொண்டு அதட்கான காரணங்களைகண்டறிந்துள்ளது .

உலகில் உள்ள குழந்தைகளில் மிகவும் சந்தோஷமாக வாழும் குழந்தைகள்பற்றி வருடாந்தம் ஒரு ஆய்வினை மேட்கொண்டு அது பட்டியல் இடப்படுகின்றது, அந்த பட்டியலில் எப்பொதும் முதலிடம் பெறுவது பின்லாந்து ஆகும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்கிற குழந்தைகள் பலவிதமான அறிவுகளைப் பெற ஆர்வமாக உள்ளனர். பின்லாந்தில் இந்த கல்வி முறையைப் பற்றி அறிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த நாட்டுக்கு சென்றுகொண்டேதான் இருக்கின்றனர். அதற்காக, உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்துக்கு வருவார்களாம். இதுபோன்ற வெளிநாட்டு கல்விச் சுற்றுலா பயணிகளின் வருகையால் பின்லாந்துக்கு ஒரு பெருமளவிலான அளவிலான அந்நிய செலாவணியும் நாட்டுக்கு கிடைக்கப்பெறுகின்றது. ஆனால் பின்லாந்தின் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் சர்வதேச அளவில் பாராட்டைப் பெறுவதில் மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்:
"உலகின் சிறந்த கல்வி முறை பினிஷ் கல்வி முறை (Fennish Education System) என்று கூறமுடியுமா என்று ஒரு பின்லாந்து அறிஞரிடம் கேட்கப்பட்டபோது அதட்கு அவர் அவ்வாறு முடியாது. OCEDயின் ஆய்வுக்கு உலகின் உள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கும் வரையில் இந்தக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாதது." எமது நாட்டைவிட தரம் வாய்ந்த கல்விமுறைமைகளை கொண்ட நாடுகள் உலகில் இருக்கக்கூடும் என்று மிக தாழ்மையாக பணிவுடன் கூறினார். ஒரு சிறுவிடயத்துக்கு கூட தனக்குத்தானே பாராட்டு விழாக்கள் நடாத்திக்கொள்ளும் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வாழும் சூழலில் இருந்து வந்தவன் என்கின்ற வகையில் இந்த பின்லாந்து அறிஞரின் கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. பின்லாந்தில் ஆசிரிய தொழில் மிகவும் கெளரவமான அதி உயர் தொழிலாக கருதப்படுகின்றது. அந்த நாட்டின் அரச கொள்கை வகுப்பு மற்றும் அரசியல் யாப்பு வரைபு போன்றவற்றுக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை கட்டாயமாக்கி பெற்றுக்கொண்டுள்ளனர்.

Fennish இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள் . ஆனால் அந்த நாட்டில் ஆசிரிய நியமனங்கள் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதி உயர் புள்ளிகளை பெற்ற அதி திறமையான மாணவர்களையே ஆசிரியர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த பயிற்சி ஐந்து ஆண்டுகள் வதிவிட பயிற்சியாக இடம்பெரும். அது மட்டுமல்ல இந்த ஐந்து ஆண்டு பயிற்சியில் கற்றல் கற்பித்தல் சம்பந்தமாக போதிய அறிவைப் பெற்றுக்கொள்வார்கள், அதன்பிறகு 6மாத கால ராணுவப்பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும், அத்தோடு ஒருவருட காலத்துக்கு பயிற்சி ஆசிரியராக பல்வேறு பாடசாலைகளில் மேலதிக பயிட்சிகளையும் பெற்றுக்கொள்வார்களாம்.
ஏழு ஆண்டு ஆசிரிய பயிற்சியின் போது எதாவது ஒரு துறையில் ஒரு செய்ட் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் , அதேநேரத்தில் சிறுவர் உரிமைகள் சம்பந்தமான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவேண்டும், அத்தோடு நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு பற்றி பரந்த அறிவு இருக்கின்றது என்கின்ற ஒரு சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வேண்டும். தீயணைப்பு , சுய பாதுகாப்பு, மற்றும் முதலுதவி போன்ற மேலதிக பயிற்ச்சிகள்பங்கேற்று சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும். பினிஷ் சிறார்களுக்கு தரம்வாய்ந்த கல்வியை பெற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு இவ்வாறான போன்ற பயிற்சிகள் வழங்குவதன் மூலம் கல்வித்துறையில் அந்த நாடு ஒரு மறுமலர்ச்சியை காணக்கூடியதாக இருக்கின்றது.

கல்வி சம்பந்தமாக எமது பொறுப்பு என்ன,

பெற்றோர்கள், கல்வியளாளர்கள், அறிஞர்கள், நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இனைந்து மாற்றத்துக்கான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு வேண்டும். முதலாவதாக, நம் குழந்தைகள் மத்தியில் நல்ல சிந்தனையைத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
பிள்ளைகளைவிட வயது முதிர்ந்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனை இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். எப்போதும் குழந்தைகளின் தவறுகளை பற்றி பேசுவதை விடுத்து, நல்லது செய்யும் போது அவர்கள் எப்பொழுதும் பாராட்ட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மனஉளைச்சலுக்கு அலாகுவார்கள்.
பாடசாலைகளில் முட்டாள்கலாக முத்திரை குத்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் பெரும் சிந்தனையாளர்களாக வந்திருக்கிறார்கள் , ஏன் எதிர்காலத்தில் வரவைப்பும் உண்டு. ஒரு ஆசிரியரோ பெற்றோர்களோ தனிநபர்களோ ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பற்றி சரியான முடிவை எடுக்க முடியாது பாடசாலை காலங்களில் அதி புத்திசாலியாக இனம்காணப்பட்டவர் அவரை எப்பொழுதும் புத்திசாலி என்று புகழபட்டவர்கள், எதிர்காலத்தில் தவறான செயட்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்களாக மாறலாம், மாறியும் இருக்கிறார்கள் மாணவர்களை தவறாக புரிந்து கொள்வது மிகப்பெரிய தவறாகும்.

உதாரணதிட்கு : தாமஸ் டேவிஸ் எடிசன், பாடசாலையில் ஒரு "முட்டாள்" என்று முத்திரை குத்தப்பட்டவர் பள்ளியில் இருந்து வெளியேறினார். பின்னர், அவர் பல கண்டுபிடிப்புகள் உரிமையாளர் ஆனார். 'Louis Pasteur ' பள்ளியில் ஒரு சாதாரண மாணவர். பின்னர் அவர் ஒரு நோபல் பரிசு பெற்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்னுக்கு அவரது ஆசிரியர் இவனைவிட மூளை கெட்ட ஒருவனை நான் என் வாழ்நாளில் பார்க்கவில்லை," என்று கூறினார். ஆனால் அவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானி ஆனார். இது போன்று உங்கள் ஊரில் , உங்கள் பாடசாலைகளில் பலரது நினைவு உங்கள் கண்முன் இப்போது வரலாம் .

பெற்றோர்களே ஒவ்வொரு நாளும் ஒருசில நிமிடங்களேனும் உங்கள் பிள்ளைகளோடு அமர்ந்து பேசுங்கள் அன்பாகவும் கருணையாகவும் இறக்கமாகவும் பேசுங்கள் . அவர்களது தவறுகள் குறைபாடுகளைப் பற்றி நீண்ட நேரம் பேசாதீர்கள். அவர்களின் திறமைகளைப் பற்றி பேசுங்கள், புகழுங்கள் . உங்கள் குழந்தைகளை அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்மாதிரியாக இருங்கள், அவர்கள் உங்களைப்பார்த்து பார்த்துக் நிறைய கற்றுக்கொள்வார்கள். அவர்களோடு பேசும்போது தங்கள் வாழ்க்கையை வென்றவர்கள் பற்றி பேசுவதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்களை பற்றி பேசுங்கள்.
கடின உழைப்பின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்ளும்போது சோம்பலை அவர்கள் அழித்துடுவார்கள். தன் நம்பிக்கையின்முலம் வாழ்க்கையை வெற்றிகொண்டவர்களை பற்றி அவர்கள் அறிந்துகொள்ளும்போது , தெரியதானத்தின் காரணமாக வாழ்க்கையில் இழந்துபோனவர்களை அவர்கள் அறிந்து கோல்வார்கள். முதலில், நாம் மாற்ற வேண்டும். நீங்கள் சிந்திக்கத் தயாராயிருந்தால், கட்டாயம் புதிய பாதைகள் நிச்சயம் உருவாகும். மற்றங்கள் தான் மாற்றமடைகின்றன . நல்ல மாற்றங்கள் தான் வாழ்க்கையின் முன்னேற்றத்தை கொண்டுவரும் பின்லாந்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -