"மாத்ய அருண" ஊடகவியலாளர்கள் இலகு கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

ஐ. ஏ. காதிர் கான்-
டகவியலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இலகு கடன் திட்டத்தை வழங்க, ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. ஊடகத்துறையில் மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்து 60 வயதுக்குக் கீழ்ப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளர்கள், முழு நேரப் பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.
இந்த இலகுக் கடன் திட்டத்தின் கீழ், ஊடகவியலாளர்களுக்குத் தேவையான ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியில்லாக் கடனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தன்னிடமிருக்கும் ஊடக உபகரணங்களின் தரத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடன் உதவிகளை வழங்கவும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர், ஊடக அமைச்சுக்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -