2015 ல் அதாஉல்லாஹ் வை வீழ்த்த சதி செய்தவர்களால் உதுமா லெப்பை யை பிரித்து வைக்க முடிந்திருக்கிறது.


அஸ்மி அப்துல் கபூர்-

நடந்தவைகளும் யதார்த்தங்களும்.01
றுப்பு ஆடு என சிலரால் சிலரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வசனம் காலம் சில உண்மைகளை நேரம் பார்த்து வெளியிடும் போது "பலி ஆடு" என பொருள் படுகிறது.
கடந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதி தவிசாளர் நியமனத்தின் போது அஇமகா கட்சி தனது ஆதரவை தேசிய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலத்தி மு.காங்கிரஸுக்கு வழங்கியிருந்தது.

காரணம் என்ன?
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தேசிய காங்கிரஸ் தலைவர் அ இ மக்கள் காங்கிரஸை விமர்சித்த போதும் அட்டாளை சேனை பிரதேச சபை தவிசாளர் தேர்வின் போது ஆதரவளித்ததுக்கும் தற்போது ஆதரவளிக்காமைக்குமான காரணமாக அ.இ.ம.காங்கிரஸூடன் கடந்த
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன் உடன்பாடு கண்டிருந்த
தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவரான உதுமா லெப்பை அப்போது கட்சியில் இருந்தார்.இப்போது இல்லை.

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் அ.இ.ம.காங்கிரஸூடன் பேசி என்ன உடன்பாடு கண்டிருந்தார்----

ரவூப் ஹக்கீமை வீழ்த்துவோம்
என்ற கோசத்துடன் முகாவிலிருந்து பிரிந்த ஹசனலி பசீர் போன்றோருடன் ரிசாட் பதியுதீனையும் இணைத்து கொண்டு முஸ்லீம் கூட்டமைப்பு எனும் பெயரில் களமிறங்கலாம் எனும் யோசனை தேசிய காங்கிரஸ் தலைவரிடம் முன் மொழியப்பட்ட போது ஹசனலி பசீர் போன்றோருடன் கூட்டு வைப்பதில் சங்கடங்கலில்லை
என்றும் ஏற்கனவே ரணிலுடன் கூட்டு வைத்துக் கொண்டு 2015 பொதுத்தேர்தலின் போது ரணிலினால் அம்பாரையில் நன்கு திட்டமிட்டு அதாஉல்லாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்ட ரிசாட் அணி ரணிலின் கூட்டுடன் இருப்பதால் அவர்களுடன் நாம் இணக்கபாட்டுடன் வர முடியாது.

இதையும் ஒரு வகையான அரசியல் நகர்வாகவே அதாஉல்லாஹ் கருதினார்.
இறுதியில் ரிசாட்டுடன் கூட்டு வைத்த ஹசனலி அணியினருக்கு அதாஉல்லாஹ் யூகித்தே நடந்தது.
இந்த நேரத்தில் ரிசாட்டுடன் கூட்டுக்கு அமீரலியால் பேசப்பட்டு தலைவர் அதாஉல்லாவுடன் பேச வைக்கப்பட்டவர் தான் உதுமாலெப்பை.

அதன் பின்னர்,
1. கட்சியை பலவீனப்படுத்த உள்ளுக்குள் இருந்து நடித்திய நாடகங்கள்

2.பஹீஜின் ஆசன ஒதுக்கீடு தொடர்பான முரண்பாட்டை ஊதி பெருக்க வைத்த விதம்

3.இறுதியில் ரிசாட்டுடன் இணைய கட்டம் கட்டமான நகர்வு

4.அஸ்மி அப்துல் கபூர் கருப்பாடு என சொல்லி பலி கொடுக்கப்பட்ட தருணம்


இன்சா அல்லாஹ் தொடராக எழுதலாம் என நினைக்கிறேன். துரோகங்களும் விசுவாசமு அல்லாத அரசியலில் வெகு நாள் பயணிப்பது தர்மமில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -