மகளிா் மற்றும் சிறுவா் பாராமரிப்பு அமைச்சும் சர்வதேச , உள்ளுர் அரச நிறுவனங்களின் மகளிா் அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பாா்க்கில் இருந்து நடைபவணியும் விகாரமாகதேவி உள்ளக அரங்கில் ஒன்று கூடி தமது கருத்துக்ளையும் முன் வைத்தனா் இந் நிகழ்வுகள் மகளிா் மற்றும் சிறுவா் பராமரிப்பு அமைச்சா் சந்திராணி பண்டார தலைமையில் நடைபெற்றது.
அமைச்சா் தொடா்ந்து அங்கு உரையாற்றும்போது -
பெண்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம், தங்களது பிரச்சினைகளை வீட்டில் தொழில் பாா்க்கும் இடங்களில் வீடுகளில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கலுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இடம் பெறும் பாலியல், வன்முறை கொடுமைகள், இலங்கையில் நாளாந்தம் நடைபெற்று வருகின்றது. நீங்கள் ஒரு போதும் அமைதியாக இருக்க வேண்டாம் .24 மணித்தியாலயமும் இயங்கும் பொலிஸ் நிலையங்களில் அல்லது 1938 இலக்த்துக்கு தெரிவியுங்கள்.
மகளிர் அமைப்பின் பெண்களுக்கு மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எற்படுத்தப்படுகின்ற எல்லாவித வன்முறைகளுக்கும் நீங்கள் இன்னும் ஒரு பெண்னுக்கு நடக்காது அதனை தடுத்தல் ்வேண்டும். இந்த நாட்டில் பெண்கள் ஆண்களை விட 55 வீதத்திற்கு மேல் உ்ளளனா். சகல அரச தனியாா் வெளிநாட்டு தொழில்களில் பெண்களே அதிகம் உள்ளனா். வீடுகளிலும் பெண்களே முகாமைத்துவத்தினை , பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனா். என அமைச்சா் சந்திராணி பண்டார அங்கு தெரிவித்தா்
கொழும்பில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் மகளிா் அமைப்புக்கள் பெண்களுக்கான உரிமைகள், வன்முறைகள் , எதிா்காலத்தில் மாகாணசபை, பாராளுமன்றத்தில் உறுப்பிணா்கள் தெரிவில் பென்களுக்கான 25வீதமாவது விகிதசார பிரநித்துவம் கட்டாயமாக வழங்கப்படல் வேண்டும். போதைப்பொருள் பாவனை, மது, புகைத்தல் போன்றவற்றையும் ஒழிப்போம் என பல கோரிக்கைகள் கொண்ட கோசங்களுடன் கொழும்பு நகர் சுற்றுவட்த்தினை மகளிா் உறுப்பிணா்கள் ஊர்வலமாகச் சென்றனா். அத்துடன் விகாமகாதேவி பாா்க்கில் அமைச்சர். அமைச்சின் செயலாளா், சிறுவா், மகளிர் பராமறிப்பு அதிகார சபை அதிகாரிகள் தலைமையில் கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு பெண்களுக்கான வன்முறைகளை ஒழிப்போம் எனும் வீதி நாடகங்கள் , பாதிக்க்பபட்ட பெண்கள் தம்மை எவ்வாறு மீட்டுக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ,பெண்கள் அச்சம் காரணமாக அமைதியாக இருக்காமால் 24 மணித்தியாலயங்களும் இயங்கும் 1938 எனும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு தெரிவிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் நாடு முழுவதிலும் சகல அரச தணியாா் போக்குவரத்து பஸ்கள், முச்சக்கர வண்டி, புகையிரத வண்டிகள், பஸ் நிலையங்களில் பெண்களுக்கான வன்முறை மற்றும் அவசர அழைப்பு இலக்கம் கொண்ட ” ஸ்டிக்கா்” ஒட்டும் நிகழ்வும், ,8 திகதிகளில் அநுராதபுரத்தில் பெண்களது சுயதொழில் மற்றும் உற்பத்திகள் விற்பனைக்கூடங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளா் தர்சனா சேனநாயக்கா தெரிவித்தாா்.