பாக்கிஸ்தான் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்ட இந்திய விமானப்படைவீரர் அபினந்தனை விடுதலை செய்ய கோரும்-ஸ்டாலீன்

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய சர்வீஸ் எண் 27981. அவர் இப்போது எங்கள் ராணுவத்திடம் உள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்தது.



இதற்கிடையே, பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தன் வர்த்தமான் என்பதும், சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அபினந்தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சுற்றி எனது நினைவுகள் தற்போது உள்ளது என தெரிவித்துள்ளார்.மாலைமலர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -