குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள தும்புத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் பெல்212 விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழிற்சாலையில் பாரியளவில் தும்பு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (27) காலை 10.00 மணியளவில் தேனீர் இடைவேளைக்கு சென்றிருந்த வேளையில் இந்த தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குருணாகல மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவும், சிலாபம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தீயினால் ஏற்பட்ட அதிக உஷ்ணத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இதுவரை பலர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -