முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி-
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது யதார்த்தம். உலமா கட்சி-
சபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றுகிறது என தெரிந்ததும் இன்னொரு கட்சியை குறிப்பாக மக்கள் காங்கிரசை பலப்படுத்தியிருக்க வேண்டும்.
அப்போது எங்கே தமது வாக்குகள் பறி போய் விடுமோ என்ற அச்சத்தில் மு. கா நல்லதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கும்.
மு.காவும் வேண்டாம் ம. காவும் வேண்டாம் என சா. மருது எடுத்த முடிவு மிகப்பெரிய வரலாற்று தவறாகும்.
மு. காவின் வாக்குகள் சுயேட்சையிடம் அப்படியே உள்ளன. அவை கடந்த கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரசை வீழ்த்த பாவிக்கப்படாமல் மறைமுகமாக முட்டுக்கொடுத்தன.
மு. காவுக்கு சாய்ந்தமருது மக்கள் பாடம் படிப்பிப்பதாயின் மு. காவின் எதிரியான ம. காவுடன் இணைந்திருக்க வேண்டும். இதை படித்து படித்து சொன்னேன். மு. கா என்பது கல்முனை முஸ்லிம்களையும் சா. மருது முஸ்லிம்களையும் ஒரு சேர ஏமாற்றுகிறது.
இன்று எல்லாமே முற்றி விட்டதால் சா. மருதுக்கு மட்டும் சபை என்பதை ம. காவும் ஏற்காது. காரணம் கடந்த மாநகர சபை தேர்தலின் போது சா. மருது ம. காவை முற்றாக ஒதுக்கிய போது கல்முனைக்குடி மக்கள் ம. காவுக்கு கணிசமான வாக்கை அளித்தனர். எனவே அம்மக்களையும் பார்க்கும் கடப்பாடு ம. காவுக்கு உண்டு.
ஆக சாய்ந்தமருது கடந்த தேர்தலில் மு. காவுக்கு ஒரு பாடமும் புகட்டவில்லை. மு. காதான் கல்முனையில் இன்னமும் ஆட்சி செய்கிறது. ஆட்சியை மாற்றியிருந்தால் மு. கா பாடம் படித்திருக்கும். மாறாக சாய்ந்தமருது 100 வீதம் ஏமாந்து நிற்கிறது.
மறைந்த தலைவர் அஷ்ரபின் ஆசையின் படி சாய்ந்தமருதும் இணைந்த கல்முனை இப்படியே இருக்கட்டும். ஹக்கீம் காங்கிரசை ஒதுக்குவோம் என்பதே இனி கோசமாக இருக்க வேண்டும்.
இனியாவது சா. மருது மக்கள் உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அவருடன் இணைந்து செயல்பட முன் வர வேண்டும். இதன் மூலம் சபை கிடைக்கிறதோ இல்லையோ தம்மை முழுமையாக ஏமாற்றிய மு. காவுக்கு பாடம் புகட்டியதாக முடியும். கல்முனையின் ஒற்றுமையை காக்க முடியும். இது தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.
