வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து


ஐ. ஏ. காதிர் கான்-
வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக வேகத்துடன் பயணிப்பதனால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி, சிலாபம் - மஹாவெவ பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று, வீதியை விட்டும் விலகி மின்மாற்றி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியது.
இந்தச் சம்பவத்தில், குறித்த பஸ் வண்டி அதிக வேகத்தில் பயணித்தமையே இவ்விபத்துக்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நிகழ்வுக்கு முன்னரும், பின்னரும் பல வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, இனி வரும் காலங்களில், அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை, 1955 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு உடனடியாக முறையிட முடியும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொதுமக்களைக் கேட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -