கல்முனையை இனரீதியில் பிரிக்காமல் இரண்டாக பிரிக்கலாம் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படி இரண்டாக பிரிக்கப்பட்ட பின் எதிர் காலத்தில் இனரீதியாகவும் பிரிய மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
இந்த ஆட்சியின் அச்சாணியாக இருப்பது தமிழ் கூட்டமைப்பாகும். அவர்கள் எதனை கேட்டாலும் கொடுக்க ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார். இதனை சாதகமாக பயன்ப்டுத்தி இரண்டாக பிரித்ததையும் காரணமாக காட்டி இனரீதியான பிரிவுகள் ஏற்பட்டு மிகப்பெரும் இனக்கலவர பூமியாக கல்முனையை மாற்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன விரும்புகிறாரா?
ஆகவே இன்றை சூழலில் எக்காரணம் கொண்டும் கல்முனையை பிளவு படுத்தாமல் இருப்பது போன்றே ஒன்று பட்ட கல்முனை மாநகர சபையாக இருக்க சகல அரசியல்வாதிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி வேண்டிக்கொண்டுள்ளது.
