டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019

பி.எம்.எம்.ஏ.காதர்-
ங்கா சாதனையாளர் மன்றம் நடாத்தும் “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019” எதிர்வரும் 2019-03-01ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு கொழும்பு.07,ஹட்டன் பிளேஸ்,லைட் ஹவுஸ் ஒடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.
லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இதில் இணைப் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற சபாநாயகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய,இந்தியாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் விஜேய குமார் ஆகியோரும்; கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் டாக்டர் எம்.எச்.றிஸ்வி ஷரீப்,பேராசிரியர் டாக்டர் எஸ்.எல்.றியாஸ், பேராசிரியர் டாக்டர் லக்ஸ்மன் மதுரசிங்க,பேராசிரியர் டாக்டர் நாபிட் கபூர்,டாக்டர் டாக்டர் திருமதி ஈ.ஏ.டி.அனுஸா எதிரிசிங்க,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்,டாக்டர் சன்ஜயா ஹ_லத்துடுவ,டாக்டர் எட்வின் ஆரியதாஸ ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இங்கு சேவை மாண்புறும் விருது,வர்த்தக மாண்புறும் விருது,கல்வி மாண்;புறும் விருது,சமூக சேவை மாண்புறும் விருது,சிறந்த செயற் திட்ட மான்பறும் விருது, சமாதானத் தூதுவர் மாண்புறும் விருது,நீதித் தூதுவர் மாண்பறும் விருது,இளைஞர் மாண்பறும் விருது,வாழ்நாள் சாதனையாளர் மாண்பறும் விருது என பத்துத்துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட 85 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இத்துடன் இணைப் பிரதம அதிதிகளுக்கும்,சிறப்பு அதிதிகளுக்கும் ஆசியாவின் பெருமை விருதும்,இலங்கையின் பெருமை விருதும் வழங்கப்படவுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -