12ஆம் கிராமத்தினை சோந்த சிப்னா பாடசாலை மாணவியை காணவில்லை


எம்.எம்.ஜபீர்-
மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 12ஆம் கிராமத்தினை சோந்த சஹாப்தீன் பாத்திமா சிப்னா (வய து 16) எனும் மாணவியை இரண்டு வாரங்களாக காணவில்லை என அவரது பெற்றோர்கள் மத்தியமுகாம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 12/56 சாளம்பைக்கேணி- 04 எனும் விலாசத்தில் வசிக்கும் சஹாப்தீன் பாத்திமா சிப்னா எனும் மாணவி சாளம்பைக்கேணி அஸ்-சிறாஜ் மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயின்று வருகின்றார். இம் மாணவி கடந்த 2019.02.11ஆம் திகதி திங்கட்கிழமை காலை பாடசாலை செல்வதற்காக புறப்பட்டு சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளார்.
இம்மாணவியை உறவினர் வீடுகளில் தேடிய போதும் எங்கும் காணவில்லை. இதனையத்து 2019.02.12ஆம் திகதி செவ்வாய்கிழமை மத்தியமுகாம் பொலிஸில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்மாணவி தொடர்பாக இதுவரைக்கும் எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் தொடர்பில் ஏதாவது தகவல் கிடைக்கப்பெற்றால் பெற்றோர்கள்களின் பின்வரும் 0775848852, 0771952114 தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -