பர்ஹான் மொஹமட்-
வெலிகம வாழ் அனைத்து சமூக சேவைகள் சங்கங்கள்இ சிவில் அமைப்புக்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் இணைந்து “போதைப் பொருள் அற்ற வெலிகம நோக்கி” என்னும் தொனிப் பொருளில் மாபெரும் நடைபவணியொன்று இடம்பெற்றது.வெலிகாமம் தெனிப்பிட்டிய அஸ்ஸபா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான இந்த நடைபவணி புதியதெரு, கல்பொக்கை, பழைய தெரு மற்றும் கோட்டகொடை ஆகிய பிரதேசங்கள் ஊடாகச் சென்று அறபா தேசிய பாடசாலையை வந்தடைந்தது. இன, மத, குல வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்ட இந்நிகழ்வில் போதைப் பொருள் பாவணை முற்றாக வெலிகம நகரிலிருந்து ஒழிப்போம் என்று உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நடைபவணியில் கலந்து கொண்டோர் சுலோகங்கள், பதாகைகள் மற்றும் பென்னர்களை ஏந்தி போதைப்பொருள் பாவணையை எதிர்த்த வன்னம் அமைதியான முறையில் வெலிகம நகர்ஊடாக பவணியாக வந்தனர்.
இந்நிகழ்வில் வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் விஜேவிக்கிரம உப தலைவர் எம் ஜே எம் மின்ஹாஜ், நகர சபை உறுப்பபினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், வெலிகம பிரதேச உறுப்பினர்கள், மாத்தறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார, வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் ஜயதிலக்க, வெலிகம பிரதேச செயலாளர் சுமித் ஷாந்த, தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) எம் ரி எம் ஆகில்,
உலமாக்கள், சர்வமத தலைவர்கள், ஊர் மக்கள், பொலிஸார், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், பாடசாலை மற்றும் மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பெரும் திரலானோர் கலந்து கொண்டு இந்த நடைபவணியை அலங்கரித்தனர். இந்த நடைபவணியில் இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை வெலிகம வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படக்கூடிய ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.




