முள்ளிப்பொத்தானை மஸ்டா நிறுவன ஏற்பாட்டில் ஸலாமா தினம் நேற்று ஞாயிற்றுக் கிழமை (24) ஞாயிற்றுக் கிழமை முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தில் மஸ்டா நிறுவன அதிகாரி கே.டீ.நௌசாத் ஆசிரிய ஆலோசகர் தலைமையில் இடம் பெற்றது.
"நமது பிள்ளை நமது பொறுப்பு"எனும் தொனிப் பொருளில் ஸலாமா தின நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
"பிள்ளை வளர்ப்பை கூட்டுப் பொறுப்பாக கருதுவோம் " எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.ஏ.அனஸ் முஹம்மது நளீமி உரையாற்றினார்.
இவ் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ தாலிப் அலி ஹாஜியார், கௌரவ ரெஜீன், முள்ளிப்பொத்தானை வடக்கு வட்டார வேட்பாளர் ஏ.சீ.நஜிமுதீன் ,பெற்றார்கள் சமூக ஆர்வலர்கள் ,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.