திறந்த பள்ளிவாசல் நிகழ்வு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஸ்லாமிய கல்வி நிலையமும், கொழும்பு-03 இல் உள்ள கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலும் இணைந்து திறந்த பள்ளிவாசல் நிகழ்வு ஒன்றினை (22) ஏற்பாடு செய்திருந்தன.

சகோதர இன மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், சமுக மற்றும் இன ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலும் பள்ளிவாசல்களில் தொழுகைகள், குத்பா உரைகள், குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் எவ்வாறு இடம் பெறுகின்றது போன்ற விடயங்களை நேரடியாக தெளிவுபடுத்தும் நிகழ்வாக இந்த திறந்த பள்ளிவாசல் நிகழ்வு விளங்குகின்றது.

இந்நிகழ்வில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மேல்மாகாண ஆளுநர் அசாத் ஷாலி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், மாற்றுமத சகோதர, சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பௌத்த மத போதகர்கள், பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இஸ்லாமிய கல்வி நிலைய தொண்டர்களாலும், பள்ளிவாசல் நிருவாக சபையினராலும் சிறந்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -