கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அஸீஸுல் ரஹீம் முன்வைத்த கோரிக்கை ஒன்றினை வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.எம். இம்தியாஸ் நிறைவேற்றியுள்ளார்.
தான் கடமை புரியும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தேவையாகக் காணப்பட்ட குப்பைக் கூடைகளை பாடசாலைக்கு வழங்கும்படி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அஸீஸுல் ரஹீம் ஆசிரியர் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். இம்தியாசிடம் வேண்டிக் கொண்டார். அவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர் குப்பைக்கூடைகளை நேற்று (21) பாடசாலையின் பிரதி அதிபர் எம்.யூ.எம்.முகைதீன் அவர்களிடம் கையளித்தார்.
இத் தேவையினை நிறைவேற்றித் தந்த இரு உறுப்பினர்களுக்கும் பாடசாலை நிருவாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.