சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கு கல்முனை மாநகர சபை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரை, வைத்தியசாலை சமூகத்தின் சார்பில் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் அவர்கள் சான்றுப்பத்திரம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது வைத்தியசாலையில் பல வருட காலமாக இருந்து வந்த வெள்ள நீரோட்ட பிரச்சினை அண்மையில் தாம் விடுத்த வேண்டுகோளையேற்று உடனடியாக செயற்பட்ட முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அவசர நடவடிக்கை காரணமாக சில மணி நேரத்தில் சீர்செய்யப்பட்டுள்ளது என்று இதன்போது பாராட்டும் நன்றியும் தெரிவித்த டாக்டர் சனூஸ் காரியப்பர், எமது வைத்தியசாலையின் திண்மக்கழிவகற்றல் பணி, கல்முனை மாநகர சபையினால் தினசரி ஒழுங்காக முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.