வகவ தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பதிதியாக மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான பிரதி பணிப்பாளர் ஆர். உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். வகவ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ் வரவேற்புரை வழங்க கவிஞர் எஸ். தனபாலன் நன்றியுரை வழங்கினார்.
வகவ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 54 வது கவியரங்கிற்கு தலைமை தாங்கினார். மிகவும் சுவாரசியமாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் கலைவாதி கலீல், அஸ்ரப் சிஹாப்தீன், தமிழ்த் தென்றல் அலி அக்பர், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், கிண்ணியா அமீர் அலி, எஸ். தனபாலன், எம். பாலகிருஷ்ணன், அப்துல் லத்தீப், எம். எஸ். தாஜ்மஹான், மஸீதா அன்ஸார், ரி.என். இஸ்ரா, ராஹிலா ஹலாம், எம். வஸீர், போருதொட்ட ரிஸ்மி, கம்மல்துறை இக்பால், எம். எச். எம். நவ்சர், மாத்தளை தில்லைராஜன், வெளிமடை ஜஹாங்கீர், கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ், மலாய் கவி டிவாங்சோ ஆகியோர் கவிதை பாடினர்.
சிறப்பதிதி உதயகுமார் அவர்கள் வகவ பணிகளை சிலாகித்து உரையாற்றினார். வாசிக்கப்பட்ட அனைத்து கவிதைகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்த அவர் ஒவ்வொரு கவிதை குறித்தும் தனது கருத்தினை சுவாரசியமான முறையில் பதிவு செய்தார்.
மேலும் எங்கள் வரலாறுகள் எழுதப்பட்ட வேண்டும் எனவும் பொடுபோக்கான முறையில் நாம் அவற்றைப் பதிவு செய்யாமல் விடவும் கூடாது எனவும் எமது வருங்கால சந்ததியினர் எமது வரலாற்றை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி , த. மணி, இரா. செல்வராஜா, கனிவுமதி, உ. பிரியங்கா, கலா விஸ்வநாதன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், எம். எஸ். எம். ராஸிக், உ. யுதிஸ்ரன், ஏ.எம். எஸ். உதுமான், கே. செல்வராஜன், எஸ். எச். எம். இத்ரீஸ், எம். என். யாசிர் ரஜாப்தீன், எம். ஜே.எம். ஹரீஸ், ரிஸ்லி சம்சாட், சங்கர் கைலாஷ், எம். பௌஸான், கவி சித்தன், ஜொயேல் ஜோன்ஸன், ஐ.எல்.எம். ஆசிக், என்.கே.டீன் நூர் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.