மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபைஉறுப்பினரும், சமூக சேவையாளருமான அலியார் ஹாஜியாருக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினரான எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில் கடந்த காலங்களை ஞாபகப்படுத்தினால் தற்போதைய தலைவர் இப்பிரதேசத்திற்கு ஆற்றிய பல்வேறுபட்ட சேவைகளைக் குறிப்பிடலாம், அதிலும் இப்பள்ளிவாசலின் கட்டட பணிகளுக்காக தனது சொந்த பணத்தினையும், நேர காலங்களையும் செலவு செய்த ஓர் சமூகத்தின் சிந்தனை கொண்ட மனிதர்.
அத்துடன், இப்பள்ளிவாயலினை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் பணங்களும், அவர்களின் உடல் உழைப்புக்களும், ஏனைய தனவந்தர்களின் உதவிகளுடனும் தங்களது நேர காலங்களை ஓதுக்கி இப்பள்ளிவாயலுக்காக அரும்பாடுபட்டவர்களில் எப்போதும், இப்போதும் நினைவுகூறப்பட வேண்டியவர்களாக தற்போதைய அலியார் ஹாஜியார் மற்றும் முன்னாள் தலைவர் மகுமூது ஹாஜியார் இருவரும் இப்பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்றவர்களாகும்.
அத்துடன், அலியார் ஹாஜியாரின் தலைமையின் கீழுள்ள பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களும் தங்களது நேர, காலங்களை ஓதுக்கி இப்பிரதேச மக்களின் நன்மை, தீமைகளில் பெரும் பங்காற்றியும், சமூகம் சார்ந்த செயற்பாகளில் பங்களிப்புச் செய்தும் வருகின்றனர்.
இத்தருனத்தில் அவர்களையும் நான் நினைவு கூர்ந்தவனாக நிருவாக சபை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் ஒரு பக்கச் சார்பற்ற அரசியல் சிந்தனையற்ற, சமூகம் சார்ந்த, நடுநிலைமை முடிவுகளின் மூலம் எம் பிரதேசத்திற்க்கும், எம்மக்களுக்கும் தங்களது சேவைகளை வழங்க வேண்டுமென்றும் இத்தருனத்தில் உங்கள் அனைவரிடமும் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
அத்துடன், இப்பிரதேச மக்களின் வாக்குகளினால் பிரதேச சபைக்கு தெரிவான மக்கள் சேவகன் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் தற்போதுள்ள பள்ளிவாசல் தலைமை மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களின் சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு எப்போது நான் உங்கள் அனைவருக்கும் உறுதுனையாக இருப்பேன் என்ற செய்தியினையும் உங்களிடம்
