கிண்ணியா எகுத்தார் நகர் கிராம சேவகர் பிரிவில் ரொக்ஸ் வீதியானது மிகவும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை கிரவல் இட்டு புனரமைத்து மக்கள் பாவனைக்காக இன்று ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களால் கையளிக்கப்பட்டது.
எகுத்தார் நகரையும் குறிஞ்சாக்கேணி பாலம் வரையாக செல்லும் இவ் வீதியானது கடந்த பல வருடகாலமாக தேடுவாரற்று குண்டும் குழியுமாகவும் மழை காலங்களில் பயணிக்க முடியாத நிலை காணப்பட்டது.
இதனை மக்கள் உரிய வட்டார நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததையிட்டு குறித்த ரொக்ஸ் விளையாட்டு மைதான வீதிக்கான கிரவல் இட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.
கரையோன வீதியாகையால் வெள்ளத் தடுப்பு சுவர் ஒன்றையும் இவ் வீதிக்காக எதிர்காலத்தில் அமையப் பெறவுள்ளதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் இதன் போது தெரிவித்தார்.