இன்று கல்முனையில் புளுஸ்கை கெம்பஸ் அங்குரார்ப்பணம்!

காரைதீவு நிருபர் சகா.-
ல்முனையில் புளு ஸ்கை கெம்பஸின் (BLUE SKY CAMPUS) அங்குரார்ப்பணவைபவமும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று(19) திங்கட்கிழமை மாலை 4.50 மணிக்கு நடைபெறும்.

கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி என்.புள்ளநாயகம் (திருக்கோவில்) எம்.எஸ்.அப்துல்ஜலீல்(கல்முனை) ஆர்.சுகிர்தராஜன்(பட்டிருப்பு) எம்.எஸ்.சஹ¬-_துல்நஜீம்(சம்மாந்துறை) மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

மேலும் 12 அதிபர்கள் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.
திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் 'சகலருக்கும் கல்வி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -