காட்டு யானைகள் வசிப்பிடத்தில் புகுந்து தாக்கியதில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளனர் இச் சம்பவம் இன்று (23) மஹிங்கனைப் பகுதியில் அதிகாலை 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவறுவதாவது
ஓட்டமாவடி, பதுரியா நகரைச் சேர்ந்த றிஸ்வான் என்பவர் மஹியங்கனையில் வசித்து வந்தார்.
சம்பவம் நடந்த நேரத்தில் றிஸ்வான் என்பவருடைய இரண்டு பிள்ளைகளும் இவரின் பராமரிப்பிலுள்ள உறவினரின் இரண்டு பிள்ளைகளும் ஒரு வீட்டில் ஒன்றாக உறங்கியுள்ளனர். நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை குறித்த வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களை தாக்கியத்தில் இரண்டு சிறுமிகள் (ரிஸ்கா வயது 9 மற்றும் உறவினரின் மகள் வயது 11) சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.