இவ் வைபவத்தில் கல்முனை ரொட்டறி கழக தலைவர் திரு சிதம்பரநாதன் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்புஉரை நிகழ்தினார். கடந்த ஆண்டின் தலைவர் திரு சிதம்பரநாதன் அவரது காலத்தில், சிறப்பாக சேவை செய்வதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவரும் முன்னாள் திருகோணமலை ரொட்டறி கழக தலைவருமான வைத்திய கலாநிதி ஞானகுணாளன் கலந்துகொண்டார். இந்த வைபவத்தில் ஏழு திருகோணமலை ரொட்டறி அங்கத்தவர்கள் அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் திரு சிதம்பரநாதன் புதிதாக தெரிவான தலைவர் பொறியியயாளர் சதீஸ் குமார்அவர்களுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
பிரதம விருந்தினர் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாகபாராட்டினார். சரியான தேவையுள்ள மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.