இரு கிழமைக்குள் காணி உறுதிப்பத்திரங்கள்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் உள்ள காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இரு கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திரூகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக உடனான சந்திப்பின் போது காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கிண்ணியா பைசல் நகரில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கான காணி கச்சேரி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் அவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்க முடியாமையிட்டு இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணா திலகவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே இவ்வாறாக இரு வாரங்களுக்குள் உரியவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -