ஏறாவூர் - கூட்டுறவு வைத்தியசாலையில் இலவச வைத்திய முகாம்

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
றாவூர் - கூட்டுறவு வைத்தியசாலையின் எட்டு ஆண்டுகள் பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் 23.09.2018 நடைபெற்றது.
கூட்டுறவுச்சங்கத்தின் பொதுமுகாமையாளர் எம்எல் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீரிழிவு நோயாளர்களுக்கான இரத்தப்பரிசோதனை, ஈசீஜீ போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றன.

மேலும் நோயாளர்களுக்கு பொது விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் மருந்துகளும் இலவசமாக கொடுக்கப்பட்டன.
இலவச வைத்திய முகாம் ஆரம்ப நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கேவீ தங்கவேல், கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்பிஎம்ஏ சக்கூர் மற்றும் வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பொது வைத்திய நிபுணர் எம். உமாகாந் பொது மக்களை அறிவூட்டும் நோக்குடன் எழுதிய 'நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்' என்ற கைந்நூல் இதன்போது வெளியிடப்பட்டது.
சிறந்த நிருவாகத்தின்மூலம் கிழக்கு மாகாணத்திலேயே கடந்த பல வருகாலமாக இலாபத்தில் இயங்கிவருவதனால் ஜனாதிபதி விருதுகளைப்பெற்றுள்ள ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின்கீழ் வைத்தியசாலை, மினிகோப் சிற்றி, அரிசிஆலை, பல சரக்கு மொத்த விற்பனை நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், வாகன சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -